08th January 2024 17:41:08 Hours
வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தினால் வவுனியா பேருந்து நிலையத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினருக்காக புதிதாக மேம்படுத்தப்பட்ட விடுதி வளாகம் சனிக்கிழமை (ஜனவரி 06) திறந்து வைக்கப்பட்டது. வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியூ அவர்கள் இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் கருத்தின் அடிப்படையில் வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதியின் வழிகாட்டலின் கீழ் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 22 வது பொறியியல் சேவைப் படையணி இத்திட்டத்தின் நிர்மாணப் பணிகளை மேற்கொண்டது.
இந்நிகழ்வில் 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.