25th April 2023 18:30:20 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் இராணுவ வீரர்கள் மற்றும் கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களின் ஆன்மீக எண்ணத்தை அதிகரிக்கும் நோக்கில் வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'சித் நிவ ஹம என அம புது குண சுவந்த' என்ற தொனிப்பொருளில் ‘தர்ம’ பிரசங்கம் பெலிகுல் ஓய தியான நிலையத்தின் பீடாதிபதி வண. பலாங்கொட ரத தேரர், அவர்களின் பங்களிப்புடன் கடந்த திங்கட்கிழமை (24) இடம்பெற்றது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டமானது, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சிடி ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டது.
வண. பலாங்கொட ரத தேரர் பிரசங்கத்தை ஆற்றிய போது நாடு, இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றிற்கு ஆசீர்வாதங்களைத் தெரிவித்ததுடன், இலங்கை சமாதானமாகவும், சுபீட்சமாகவும், அனைத்து பொருளாதார கஷ்டங்கள் மற்றும் சிரமங்களிலிருந்தும் விடுபட வாழ்த்தினார். இந்த பிரசங்கத்தில் உயிரிழந்த போர் வீரர்கள் மற்றும் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்காகவும் ஆசி வழங்கப்பட்டது.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 100 அதிகாரிகள் மற்றும் வன்னியில் உள்ள முப்படைகளின் 1200 சிப்பாய்கள் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.