Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th May 2023 21:55:28 Hours

வன்னி படையினரின் 'வெசாக்' கொண்டாட்டம்

வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சிடி ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொது பணி பிரிகேடியர் எஸ்பீஜி கமகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் அதன் கட்டளை அமைப்புகளில் வெசாக் கூடுகள், அன்னதானம் மற்றும் மதவழிபாடுகள் போன்றவை இடம் பெற்றன.

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு முன்பாக, ஏ-9 வீதியில் வெள்ளிக்கிழமை (மே 5) வெசாக் கூடுகள் காட்சிபடுத்தப்பட்டதுடன் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரிகேடியர் பொது பணி வெசாக் கூடுகளை ஔியூட்டி வைத்ததுடன் ஏராளமான பொதுமக்கள் வெசாக் கூடுகளை கண்டுகளிக்க கூடியிருந்தனர்.

வவுனியா நகரில் வெசாக் பண்டிகையை முன்னிட்டு, வவுனியா மாவட்ட செயலகத்தினால் ‘வெசாக் வலயம்’ ஏற்பாடு செய்யப்பட்டது. வவுனியா மாவட்டச் செயலாளரின் வேண்டுகோளுக்கிணங்க, வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி அவர்கள், ‘வெசாக் வலயத்தை’ வெற்றியடையச் செய்வதற்கு மனித வளத்தை வழங்கினார்.

வன்னி பாதுகாப்பு படை தலைமையக படையினரால் தயாரிக்கப்பட்ட வெசாக் கூடுகள் வெசாக் வலயத்தில் காட்சிப்படுத்தப்பட்டன. வவுனியா நகர மையத்தில் ‘பக்தி கீதம்’ நிகழ்ச்சிக்கான மேடை ஒன்று படையினரால் அமைக்கப்பட்டது. இந்த அலங்காரத்தை ஏராளமானோர் கண்டு களித்தனர்.