Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd May 2023 00:13:46 Hours

வன்னி படையினரால் ஆரம்பிக்கப்பட்ட மூன்று மருத்துவ முகாம்களில் 400க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணியாற்றும் படையினரால் வவுனியா கலாசார மண்டபம், போகஸ்வெவ வைத்தியசாலை மற்றும் வெலி ஓயா காவந்திஸ்ஸபுர ஆகிய பகுதிகளில் இரண்டு நாட்களில் (ஏப்ரல் 29-30) இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட மூன்று நடமாடும் மருத்துவ முகாம்களில் அந்தந்த பிரதேசங்களில் வசிக்கும் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சி.டி. ரணசிங்க ஆர்டபிள்யூ ஆர்எஸ்பீ அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக படையினரின் ஆதரவுடன் இரண்டு நாள் வைத்திய பரிசோதனை 'ஜயக்ரஹணய' அறக்கட்டளையின் வைத்தியர் (செல்வி) அனுலா விஜேசுந்தர அவர்கள் தலைமையிலான மூன்று மருத்துவ அதிகாரிகள் மற்றும் ஒன்பது தாதியர்களைக் கொண்டு இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இருதயவியல் மற்றும் பொது மருத்துவர் பிரிவுகளைக் கொண்ட மருத்துவ பரிசோதனைகள் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்காக இலவச மருந்துகள், ஆலோசனைகள் மற்றும் பரிந்துரை உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் அதே அறக்கட்டளையானது அந்த மருத்துவ பரிசோதனைகளின் போது 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் கற்றல் உபகரணங்களையும் விநியோகித்தது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் மற்றும் தடைகள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இச் சமூக சேவைத் திட்டம் இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இப் பரிசோதனைகளின் போது, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் இடங்களுக்குச் சென்று பொதுமக்கள் மற்றும் வைத்தியர் (செல்வி) அனுலா விஜேசுந்தர ஆகியோர்களுடன் கலந்துரையாடினர்,