28th October 2024 15:50:26 Hours
யாழ். போதனா வைத்தியசாலை கண் பிரிவு, பலாலி இராணுவத் தள வைத்தியசாலையுடன் இணைந்து 2024 ஒக்டோபர் 14 முதல் 25 வரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விசேட கண்புரை சத்திரசிகிச்சை திட்டத்தை நடாத்தியது. வைத்தியர். எம். மலரவன் மற்றும் ஐந்து கண் சத்திரசிகிச்சை நிபுணர்கள் குழுவின் வழிகாட்டுதலின் கீழ், வட மாகாண கிராமப்புறங்களின் 2,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இலவச, உயர்தர கண்புரை அறுவை சிகிச்சைகள் இந்த திட்டத்தி ஊடாக மேற்கொள்ளப்பட்டது.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் சிப்பாய்கள், நிகழ்ச்சியின் நிறைவு நாளில் வருகை சமூகமளித்திருந்தனர்.