01st March 2024 16:33:22 Hours
14 ஆவது இலங்கைப் பாதுகாப்புப் படை குழு கட்டளை அதிகாரி கேணல் டிபீஎல்டீ களுஅக்கல ஆர்எஸ்பீ ய்யுஎஸ்பீ ஐஜி அவர்கள் பிரதி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டப்ளியுடிஎஸ்எஸ் பெர்னாண்டோ யுஎஸ்பீ, சில அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் லெபனானின் டயர் நகரில் நிலைக்கொண்டுள்ள கொரிய ஐநா அமைதிகாக்கும் படைக்குழு 2-5 க்கு மரியாதை நிமித்தமான விஜயமொன்றை 28 பெப்ரவரி 2024 அன்று மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, கேணல் டிபீஎல்டீ களுஅக்கல ஆர்எஸ்பீ யுஎஸ்பீ ஐஜி மற்றும் கொரிய ஐநா அமைதிகாக்கும் படைக்குழு புதிய கட்டளை அதிகாரி கேணல் வான்சியோக் சியோ ஆகியோர் லெபனானின் தற்போதைய பாதுகாப்பு நிலைமையின் பங்கு மற்றும் பணிகள் குறித்து சுருக்கமான கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் சிவில் விவகார நடவடிக்கைகள் தொடர்பான பொறுப்புகள் மற்றும் ஐநா அமைதி காக்கும் படைப் பணியில் இராணுவத்தின் படையினரால் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். இறுதியாக இரு கட்டளை அதிகரிகளிடையே நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொண்டனர்.