Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd December 2023 14:53:39 Hours

லெபனான் ஐ.நா இலங்கைப் படை குழுவின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தும் பயிற்சி திட்டம்

உள்நாட்டு தொழில்நுட்ப பயன்பாடுகளில் படையினருக்கு பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன், 16 டிசம்பர் 2023 அன்று லெபனானில் உள்ள ஐ.நா இடைக்காலப் படையின் 14 வது இலங்கைப் பாதுகாப்பு படை குழுவில் பணியாற்றும் படையினருக்கு "தொழில்நுட்ப திறன்கள் மேம்பாடு" என்ற கருப்பொருள் கொண்ட பயிற்சி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இப்பயிற்சியில் வீட்டு மின் இணைப்பு முறைமை, வாகன தொழில்நுட்பம் , வாகன இலத்திரனியல் அமைப்பு, வாகன பூச்சு தொழிநுட்பம், உருக்கி ஒட்டுதல் தொழிநுட்பம், வாகன வரண பூச்சு மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பாடநெறிகள் கோட்பாடு மற்றும் நடைமுறை பயிற்சிகள் கொண்டதாக காணப்பட்டது.

பாடநெறி அதிகாரியின் அழைப்பின் பேரில் குழு கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டிபீஐடி களுஅக்கல ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஐஜி அவர்களால் ஆரம்ப உரை ஆற்றப்பட்டது. பயிற்சி நிகழ்ச்சியில் ஒரு பெண் இராணுவ வீராங்கனை உட்பட 16 வீரர்கள் கலந்து கொண்டனர்.