22nd December 2023 05:39:57 Hours
லெபனான் ஐநா இடைக்காலப் படையின் 14 வது இலங்கைப் பாதுகாப்பு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த சமூகமயமாக்கல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 15) அன்று நகோராவில் உள்ள லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை தலைமையக வளாகத்தில் உள்ள கிரீன்ஹில் சோடிர்மேன் முகாமில் இடம் பெற்றது. லெபனானில் உள்ள ஐநா இடைக்காலப் படை தலைமையகத்தில் அமைதி காக்கும் படையினர்களிடையே பரஸ்பர பிணைப்பு மற்றும் தோழமையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டது.
லெபனானில் உள்ள ஐநா இடைக்காலப் படை தளபதியின் அழைப்பின் பேரில், பல்வேறு கலாசாரப் பின்னணிகளின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் படையினர் உட்பட சக அமைதி காக்கும் வீரர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அவர்கள் லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை தலைமையகத்தில் பலதரப்பட்ட இன மற்றும் கலாசார இயற்கையின் அழகை காட்சிப்படுத்தியதுடன் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கினர்.
லெபனானில் நிலவும் சவாலான காலங்களில் அமைதி காக்கும் படையினரின் அர்ப்பணிப்பு மற்றும் அனைத்து நாட்டினரிடையே நட்புறவான பணி உறவுகளை பேணுதல் மற்றும் பாராட்டும் நிமித்தம் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.