Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th February 2024 16:09:18 Hours

லெபனான் ஐ.நா இடைக்காலப் படை பிரதி படைத்தளபதி அர்ப்பணிப்பு மற்றும் திறன் மேம்பாடிற்கு இலங்கை படையினருக்கு பாராட்டு

லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் சோக் பகதூர் தாகல் அவர்கள் 22 பெப்ரவரி 2024 அன்று கிரீன்ஹில்லில் உள்ள 14 வது இலங்கை பாதுகாப்பு படை குழு முகாமுக்கு விஜயம் செய்தார்.

வருகை தந்த பிரதி படை தளபதி அவர்களை பிரதான நுழைவாயிலில் 14 வது இலங்கை பாதுகாப்பு படை குழு தளபதி லெப்டினன் கேணல் டி.பீ.ஐ.டி களுஅக்கல ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஐஜி அவர்கள் அன்புடன் வரவேற்றதுடன் இலங்கை பாதுகாப்பு படை குழு படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியதை வழங்கப்பட்டது.

அதன் பின்னர், கடந்த மூன்று மாதங்களாக அவர்களின் ஓய்வு நேரத்தில் நடத்தப்பட்ட அவர்களின் ‘திறன் மேம்பாட்டுத் திட்டத்தின்’ போது படையினர் செய்த பணிகள் மற்றும் செயல்பாடுகளைக் காண பிரதி படை தளபதி கேட்போர்கூடத்திற்கு அழைக்கப்பட்டார். அதேவேளை, அடிப்படை வரைகலை வடிவமைத்தல் பாடநெறியில்' படையினரால் தயாரிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட புகைப்படங்கள் அவர்கள் பின்பற்றிய பாடநெறியின் போது படையினர் பெற்ற வடிவமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் திறன்கள் பற்றிய நுண்ணறிவை வழங்குவதற்காக பாதுகாப்பு படை குழு தளபதியினால் பிரதி படை தளபதிக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

பார்வையாளர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதி படை தளபதி சவாலான சூழலில் இலங்கை பாதுகாப்பு படை குழுவின் ஒரு வருட காலப் பயணத்தின் போது இலங்கை அமைதி காக்கும் படையினர் ஆற்றிய கடின உழைப்பை பாராட்டியதுடன் மார்ச் மாதத்தில் குழுவை மீள் அனுப்ப உள்ளதால் அன்பான வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

பின்னர், 'அடோப் போட்டோஷாப்பில் அடிப்படை வடிவமைத்தல் பாடநெறி' (13) மற்றும் அடிப்படை மோட்டார் தொழிநுட்ப பட்டறை' (15) ஆகியவற்றை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கான 'திறன் மேம்பாட்டுத் திட்டத்தின்' நிறைவு உரையும் சான்றிதழ் வழங்கும் விழாவும் அதே இடத்தில் நடந்தது. அவர்களுக்கு பாதுகாப்பு படை குழு தளபதி, அந்தந்த பாடநெறி அதிகாரிகள் ஆகியோரால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. படையினர் தகவல் தொழில்நுட்பம், மோட்டார் வாகன தொழில்நுட்பம், மோட்டார் வாகன இலத்திரனியல் முறைமை மற்றும் மோட்டார் வாகன பூச்சு தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன் "திறன் மேம்பாட்டு திட்டம்" முன்னெடுக்கப்பட்டது.