27th June 2023 22:06:00 Hours
லெபனான் தடகள சம்மேளனம் மற்றும் லெபனானின் பெய்ரூட் உள்ளகப் பாதுகாப்புப் படைகளின் பணிப்பாளர் நாயகம் அவர்களின் மேற்பார்வையின் கீழ் உள்நாட்டுப் பாதுகாப்புப் படையின் பொது பணிப்பகம் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த உள்ளகப் பாதுகாப்புப் படையின் அரை மரதன் ஓட்டப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) இடம்பெற்றது.
இந்த மரதன் ஓட்டப் போட்டி தொடர்ந்து 13 வது ஆண்டாக நடத்தப்பட்டது. "எல்லாவற்றையும் தாண்டி ஒன்றாய் ஓடுகின்றோம்" என்ற கருப்பொருளின் கீழ் பல்வேறு விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து கிட்டத்தட்ட 1600 ஓட்ட வீரர்கள், லெபனான் பிரத்தியேக ஓட்ட வீரர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்), லெபனான் ஆயுதப் படைகள், உள்நாட்டுப் பாதுகாப்புப் படைகள் பொதுப் பாதுகாப்பு, பிராந்திய பாதுகாப்பு, சுங்கம், பெய்ரூட் தீயணைப்புப் படை மற்றும் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை ஆகியவை தனித்தனி வயதுப் பிரிவுகளின் கீழ் பந்தயத்தில் பங்கேற்றனர்.
ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை இலங்கை படை பாதுகாப்பு குழுவை பிரதிநிதித்துவப்படுத்தி, பின்வரும் பங்கேற்பாளர்கள் 21.1 கிமீ நீளமுள்ள அரை மரதன் ஓட்டத்தை 3 மணி நேரத்திற்குள் முடித்து பதக்கங்களை வென்றனர்.
கெப்டன் எம்எஸ்எம் திஸாநாயக்க – விசேட படையணி
அதிகாரவணையற்ற அதிகாரி II எஸ்டபிள்யூ குணசிறி - இலங்கை சமிக்ஞைப் படையணி
அதிகாரவணையற்ற அதிகாரி II டபிள்யூஜி பிரியந்த குமார - இலங்கை பொறியியல் படையணி
கோப்ரல் கேபி நுவன்சஞ்சீவ – விசேட படையணி
கோப்ரல் டிஜிஎபீஎன்எம் சமந்த குமார - இலங்கை பீரங்கி படையணி
கோப்ரல் பிஎம்பீஆர் பியதிஸ்ஸ - இயந்திரவியல் காலாட் படையணி
லான்ஸ் கோப்ரல் எச்எம்டிஎம் ஜயதிலக்க - இலங்கை பீரங்கி படையணி