10th July 2023 23:12:42 Hours
14 வது இலங்கைப் பாதுகாப்பு படை குழுவின் செயல்திறன், வளப் பயன்பாடு, கொள்கை செயல்திறன் மற்றும் லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் நிர்வாக மற்றும் கட்டமைப்பு பிரச்சினைகள் மீதான காலாண்டு மதிப்பீடு லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை மதிப்பீட்டுப் பிரிவினால் செவ்வாய்க்கிழமை (27 ஜூன் 2023) கிரீன்ஹில் முகாம் வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இந்த மதிப்பீட்டு செயல்முறையானது, துணைப் பிரிவுகளின் பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களைக் கண்டறிய படை மற்றும் துறைத் தளபதிகளுக்கு உதவ வடிவமைக்கப்பட்டுள்ளது. காலாண்டு மதிப்பீடு லெபனானில் தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்கு இலங்கை பாதுகாப்பு படை படையினரின் தகுதியை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
ஐ.நா. மதிப்பீட்டுப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தி லெப்டினன் கேணல் டேனியல் உசியேட்டோ, மேஜர் கே.சி தீபக், மேஜர் மைக்கேல் ஆடம்ஸ், மேஜர் பெர்னார்ட் ஸ்டெய்ன்மெட்ஸ், மேஜர் கிறிஸ்டியன் அசிகிரி, மேஜர் அசிஸ் அரியாடி, மேஜர் ஜஹ்ருல் பஹ்மி, மேஜர் அல்கோமர் மற்றும் கேப்டன் சலினா கட்கா ஆகியோர் 14 வது இலங்கை பாதுகாப்பு படை குழு, முகாமில் உள்ள பணியாளர்கள், செயல்பாடுகள், சூழ்நிலை விழிப்புணர்வு, பயிற்சி, தகவல் தொடர்பு மற்றும் வளங்கல் முகாமை ஆகியவற்றை மதிப்பீடு செய்தனர்.