28th December 2023 21:33:51 Hours
லெபனான் ஐ.நா இடைக்காலப் படையில் உள்ள 14 வது இலங்கைப் பாதுகாப்பு குழுவின் படையினர் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 24) நத்தார் தினத்தை முன்னிட்டு லெபனானில் உள்ள ஸ்ரீ பேஸ் கேட்போர் கூடத்தில் நத்தார் கொண்டாட்ட நிகழ்வை நடாத்தினர்.
14 வது இலங்கைப் பாதுகாப்பு குழுவின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டி.பீ.ஐ.டி களுஅக்கல ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஐஜி அவர்கள் நிகழ்வுகள் ஆரம்பமாக முன் தனது உரையில் நத்தார் தின வாழத்துக்களை தெரிவித்தார். மேலும் அமைதி, அன்பு மற்றும் நல்லெண்ணத்தை மேலும் மேம்படுத்தக்கூடிய நிகழ்வின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கினார்.
நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட நத்தார் மரம் மற்றும் 14 வது இலங்கைப் பாதுகாப்பு குழுவின் படையினரால் வழங்கப்பட்ட நத்தார் பாடல்கள், நடனங்கள் நிகழ்வுக்கு வண்ணம் சேர்த்தன.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் நத்தார் தாத்தா அவரகளினால் பரிசுகள் வழங்கப்பட்டதுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.