Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th July 2023 00:51:33 Hours

லெபனானில் உள்ள இலங்கை பாதுகாப்பு படை குழு மற்றும் இந்தியா படையலகு இணைந்து மோப்ப நாய் பயிற்சி

நட்புறவு நாடுகளிடையே பரஸ்பர ஒத்துழைப்பையும் புரிந்துணர்வையும் மேம்படுத்தும் நோக்கத்துடன், மோப்ப நாய்கள் மற்றும் அவற்றைக் கையாள்பவர்களை பயன்படுத்தி இரண்டு நாள் 'கே-9 கூட்டுப் பயிற்சி' செக்டர் ஈஸ்ட் மற்றும் ஸ்ரீ பேஸ் முகாம் வளாகத்தில் உள்ள இந்தியா படையலகு மற்றும் லெபனானில் உள்ள நகோரா இலங்கை பாதுகாப்பு படை குழுவினர் இணைந்து ஜூலை 6-9 திகதிகளில் பயிற்சிகளை மேற்கொண்டனர்.

இந்தியா படையலகு குழு 24 இன் தளபதி கேணல் பூகுபேந்திர சிங் குசைன் மற்றும் 14 வது லெபனானில் உள்ள இலங்கை பாதுகாப்பு படை குழுவின் தளபதி லெப்டினன் கேணல் டிபிஎல்டி கலுஅக்கல ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆகியோரின் வழிகாட்டலில் இப்பயிற்சி முன்னெடுக்கப்பட்டது.

இந்த பயிற்சில் இரண்டு படையலகுகளிலும் உள்ள நாய்களை வெவ்வேறு இடங்களுக்கு மாற்றியமைக்கும் காட்சிகளை லெபனானில் உள்ள இலங்கை பாதுகாப்பு படை குழு மற்றும் இந்தியா படையலகு முகாம்களில் கே-9 நாய் கையாளுபவர்களுக்கு இடையே சிறந்த பயிற்சி நிலையை உறுதி செய்ய முடிந்தது.

இந்த கூட்டுப் பயிற்சியின் போது இந்திய படையலகு 24 மற்றும் லெபனானில் உள்ள இலங்கை பாதுகாப்பு படை குழு 04 இல் வெடிபொருள் கண்டறிதல் நாய்களில் ஒரு வெடிகுண்டு கண்டறியும் நாய் மற்றும் ஒரு பாதுகாப்பு நாய்கள் தங்களது சிறப்புத் திறன்களை வெளிப்படுத்தின. ஐநா இலச்சினை கொண்ட கொடியைக் கண்டறிதல், எரியும் நெருப்பு வளையங்களில் பாய்தல், தடை தாண்டல் , ஒருவரைக் காப்பாற்றுதல், கையாளுபவரின் கட்டளையின் பேரில் சந்தேகத்திற்குரிய நபரைத் கண்டறிதல், போதைப்பொருளை மோப்பம் பிடிப்பது போன்ற நாய்களின் உற்சாகமான நிகழ்ச்சிகளும் அறங்கேற்றப்பட்டன.

அதேபோன்று, இந்திய படையலகு கே-9 பிரிவின் 04 மோப்ப நாய்கள் தமது பிறவி அறிவுத்திறன், திறமை, சகிப்புத்தன்மை மற்றும் சுபாவத்தை வெளிப்படுத்தி சிறந்து விளங்கின. வெவ்வேறு பயிற்சி முறைகள் குறித்த தங்கள் அறிவைப் பரிமாறிக் கொள்ள இரு குழு உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பின்னர், பயிற்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளரும், இந்தியா படையலகு கால்நடை மருத்துவர் மற்றும் பிரிவின் தளபதியுமான லெப்டினன் கேணல் ஏ. அனீஷ் அவர்களால் விரிவுரை நிகழ்த்தப்பட்டது. நாய்களை கையாளுதல் மற்றும் நாய்களுக்கான அடிப்படை முதலுதவி பற்றிய அறிவை வழங்கினார். மேலும் லெப்டினன் கேணல் அனீஷ், கே-9 பிரிவில் உள்ள லெபனானின் இலங்கை பாதுகாப்பு படை குழுவின் நாய்களின் ஆரோக்கியத்தையும் உன்னிப்பாகப் பரிசோதித்தார்.

அன்றைய நிகழ்ச்சியின் நிறைவில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் 14வது லெபனானில் உள்ள இலங்கை பாதுகாப்பு படை குழுவின் தளபதி, லெபனானில் உள்ள இலங்கை பாதுகாப்பு படை குழுவின் கே-9 பிரிவின் பொறுப்பதிகாரி, கெப்டன் டிஎம்எஸ்எம் திஸாநாயக்க மற்றும் நாய்களை கையாள்பவர்கள் பலர் கலந்து கொண்டனர்.