02nd August 2023 22:01:47 Hours
லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் 14 வது இலங்கைப் பாதுகாப்பு படை குழுவின் லெபனான், கிரீன்ஹில், நகோராவில் ஸ்ரீ தள முகாம் வளாகத்திற்கு 2023 ஓகஸ்ட் முதலாம் திகதி விஜயம் செய்து 3 வது உபகரண ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இலங்கைப் பாதுகாப்பு படை குழுவிற்கு இலங்கை அதிகாரிகளால் வழங்கப்பட்ட உபகரணங்களின் சேவைத்திறனை மதிப்பிடுவதும், அரசாங்கத்திற்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஐ.நாவினால் வகுக்கப்பட்ட தொடர்ச்சியான செயல்திறன் தரங்களை உறுதிப்படுத்துவதும், இலங்கை லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் உபகரணங்களை நிலை நிறுத்துவதும் காலாண்டு ஆய்வின் நோக்கமாகும்.
மூன்றாவது உபகரணங்கள் ஆய்வின் தலைவர், கொள்கலன்கள், போர் வாகனங்கள், ஆதரவு வாகனங்கள்-வணிக முறை, ஆதரவு வாகன-இராணுவ முறை, ஆயுதங்கள், வெடிமருந்துகள், தளபாட உபகரணங்கள் உள்ளிட்ட முக்கிய உபகரணங்களின் தொகுப்பு, அரசாங்கத்தின் தலைமையிலான குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டது. பாதுகாப்பு படை குழுவின் தளபதி லெப்டினன் கேணல் டிபிஎல்டி கலுஅக்கல உட்பட 14 வது இலங்கைப் பாதுகாப்பு படை குழுவின் அனைத்து அதிகாரிகளுடனும் நெருக்கமான ஒருங்கிணைப்பில் ஈடுபட்டார்.
ஆய்வின் முடிவில், முக்கிய உபகரணங்கள் மற்றும் சுய-நிலைப்படுத்தல் மதிப்பீட்டு ஆய்வு பணித்தாள்கள் ஆய்வுக் குழு மற்றும் பிரதிநிதிகளால் கையொப்பமிடப்பட்டது. ஆய்வு முடிந்ததும், குழுவினர் கேட்போர்கூடத்தில் ஒன்று கூடி செயல்பாட்டில் கவனிக்க வேண்டிய சில முக்கிய விடயங்கள் ஆராய்ந்தனர்.