Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th March 2024 14:06:45 Hours

லயா பீச் ஹோட்டல் நடத்தும் அடிப்படை சமையல் பாடநெறியின் சான்றிதழ் வழங்கும் விழா

வாத்துவ 'லயா பீச்' ஹோட்டலால் நடத்தப்பட்ட அடிப்படை சமையல் பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் விழா 2024 பெப்ரவரி 29 ஆம் திகதி நடைபெற்றது. இலங்கை இராணுவத்தின் பல்வேறு படையணிகளைச் சேர்ந்த 26 சிப்பாய்களின் பங்குபற்றுதலுடன் 04 மாத காலம் இப்பாடநெறி நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் 'லயா' விடுதியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி பிரிகேடியர் பீ.ஏ.டி.டி.யு பெரேரா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் விடுதியின் பணியானர்களும் கலந்து கொண்டனர்.