Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th August 2023 00:40:13 Hours

றோயல் கல்லூரிக்கு இராணுவ அணிவகுப்பு பயிற்சி

கொழும்பு றோயல் கல்லூரியின் வேண்டுகோளுக்கு இணங்க, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14 வது காலாட் படைப்பிரிவின் 142 வது காலாட் பிரிகேடின் 21 வது இலங்கை சிங்க படையணி, 7 வது கெமுனு ஹேவா படையணி, 14 வது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 7 வது (தொ) கஜபா படையணியின் படையினர் மாணவர்களுக்கு ஜூலை 17 – 27 வரை அவர்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டியுடன் இணைந்து, ஒரு முறையான அணிவகுப்பு பயிற்சியை வழங்கினர்.

பயிற்சியின் போது, மாணவர்கள் பயிற்சியுடன் கூடுதலாக ஒழுக்கம், குழுப்பணி மற்றும் துல்லியம் ஆகியவற்றைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மற்றும் 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி ஆகியோரின் ஆசீர்வாதத்துடன் 142 வது காலாட் பிரிகேட் தளபதி இத்திட்டத்தை உன்னிப்பாகக் கண்காணித்தார்.