16th October 2024 19:04:23 Hours
2024 ஒக்டோபர் 12 ஆம் திகதி அம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ரோயல் கல்லூரி செஞ்சிலுவைச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வில் 12 வது காலாட் படைப்பிரிவின் படையினர் பங்குபற்றினர்.
12 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஜேஎஸ்பிடப்ளியூ பல்லேகும்புர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களின் மேற்பார்வையின் கீழ் 122 வது காலாட் பிரிகேட், 20 வது சிங்க படையணி, 3 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் மற்றும் சிவில் பொதுமக்கள் இந் நிகழ்வில் பங்குபற்றி இரத்ததானம் வழங்கினர். மருத்துவமனையின் இரத்த வங்கியின் மருத்துவக் குழுக்கள் நிகழ்ச்சியினை நடாத்துவதற்கு தமது உதவிகளை வழங்கினர்.