Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd February 2024 17:44:02 Hours

'ரிவர் விவ் கொட்டேஜ்' அதி சொகுசு ஓய்வு விடுமுறை விடுதி திறப்பு

213 வது காலாட் பிரிகேடினால் நிர்வகிக்கப்படும் ரிவர் எட்ஜ் அதி சொகுசு ஓய்வு விடுமுறை விடுதியில் புதிய 'ரிவர் விவ் கொட்டேஜ்' 2024 பெப்ரவரி 17 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. இவ்விழாவில் பிரதம அதிதியாக வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீஏடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ அவர்கள் கலந்து கொண்டார்.

21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 213 வது காலாட் பிரிகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுச்சூழலுக்கு மத்தியில் ஆடம்பரமான தங்குமிட வசதி கொண்ட இந்த விடுதி பார்வையாளர்களுக்கு உயர் விருந்தோம்பல் அனுபவத்தை கொடுக்கும் என உறுதியளிக்கிறது.