15th May 2023 18:41:02 Hours
வெசாக்' பண்டிகையை முன்னிட்டு மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது காலாட் படைப்பிரிவின் 144 காலாட் பிரிகேட் படையினரால் 2023 மே 04 இரட்சிப்பு இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் முதியோர் இல்லத்தின் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் சுவையான மதிய உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கப்பட்டன.
இத் திட்டத்தின் போது, இரட்சிப்பு இராணுவ - முதியோர் இல்லத்தில் வசிக்கும் 45 முதியவர்கள், 30 பிள்ளைகள் உட்பட பணியாளர்களுக்கும் சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது.
அதே சந்தர்ப்பத்தில், படையினரால் 21 பிள்ளைகளுக்கு எழுது பொருட்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
144 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டலின் கீழ் கட்டளை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் குறித்த முதியோர் இல்லத்தின் ஊழியர்களின் ஒருங்கிணைப்புடன் இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
படையினரின் சிந்தனை, அர்ப்பணிப்பு மற்றும் தாராள மனப்பான்மைக்கு இல்லத்தின் நிர்வாகம் பாராட்டியது என்பது குறிப்பிடதக்கதாகும்.