25th April 2023 18:20:20 Hours
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நிகழ்வை முன்னிட்டு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் கடந்த திங்கட்கிழமை (24) ராகம 'ரணவிரு செவன' புனர்வாழ்வு ஆரோக்கிய விடுதியில் வசிக்கும் போர் வீரர்களின் நலம் விசாரிப்பதற்காக அந் நிலையத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார்.
இங்கு வருகை தந்த மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியை ரணவிரு செவனவில் வசிக்கும் போர் வீரர் ஒருவர் தாம்பூலம் வழங்கி அன்புடன் வரவேற்றார். இதன் போது ராகம ரணவிரு செவனவின் தளபதி பிரிகேடியர் பிஎன் மதநாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களும் உடன் இருந்தார்.
அதன்பின்னர் மேற்கு தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல அவர்கள், விடுதியில் வசிக்கும் படையினரின் நலன் விசாரித்ததுடன் அவர்கள் விரைவில் குணமடைய தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டு புத்தாண்டு பரிசுப் பொதிகளையும் வழங்கினார். புத்தாண்டை முன்னிட்டு இராணுவத் தளபதியினால் அந்த பரிசுப் பொதிகள் போர் வீரர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை என்பது குறிப்பிடதக்கதாகும்.
அவர் அவ்விடத்தை விட்டுச் செல்வதற்கு முன், அதிதிகள் பதிவேட்டில் தனது கருத்துக்களை பதிவிட்டார்.
மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜேஏஆர்எஸ்கே ஜயசேகர யுஎஸ்பீ பீஎஸ்சீ, 141 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்ஜிபிடிவி காரியவசம் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ, மற்றும் இராணுவ தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.