Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th September 2021 23:07:16 Hours

ரஷ்ய தூதுவரால் தூதரகத்தின் புதிய பாதுகாப்பு இணைப்பாளர் இராணுவ தளபதிக்கு அறிமுகம்

இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் அதிமேதகு யூரி மேடெரி துதரகத்தின் புதிய பாதுகாப்பு இணைப்பாளரான கேணல் அலெக்ஸி ஏ. போண்டரேவ் அவர்களை பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு வெள்ளிக்கிழமை (10) அறிமுகம் செய்து வைத்தார்.

இதன்போது இரு நாடுகளுக்கிடையேயான நீண்டகால நல்லுறவு மற்றும் ஒத்துழைப்பு மற்றும் இராணுவத்தினருக்கிடையேயான ஒத்துழைப்பு ஆகியவற்றை நினைவு கூர்ந்த ரஷ்ய தூதுவர் மற்றும் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர் கொவிட் -19 தடுப்புப் பரவல் தடுப்பு செயற்பாடுகள் மற்றும் உலகளாவிய அளவில் தொற்றுநோய் பரவல் நிலைமை போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.

அத்தோடு தடுப்பூசி வழங்கல், இருதரப்பு பரிமாற்ற திட்டங்கள், பயிற்சி செயற்பாடுகள் போன்றவை. என்பவற்றில் இரு தரப்பும் எதிர்காலத்தில் நல்ல உறவுகளைப் பேண வேண்டியதன் அவசியத்தையும் ரஷ்ய தூதுவர் வலியுறுத்தினர். புதிய ரஷ்ய பாதுகாப்பு இணைப்பாளரை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து அவர் எப்பொழுதும் இலங்கைக்கு ஆதரவாக இருப்பார் என்றும் எதிர்காலத்தில் எல்லா வகையிலும் உதவிகளை வழங்குவார் என்றும் ரஷ்ய தூதுவர் உறுதியளித்தார்.

அதனையடுத்து ஜெனரல் சவேந்திர சில்வா இருநாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் கொவிட் – 19 பரவலை கட்டுப்படுத்துவதற்கு வழங்கிய உதவிகள் உட்பட ரஷ்யாவிடமிருந்து கிடைக்கப்பெற்ற பல்வேறு உதவிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

அதனையடுத்து இலங்கைக்கான ரஷ்ய தூதரகத்தின் புதிய பாதுகாப்பு இணைப்பாளர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.