Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th July 2023 21:38:33 Hours

ரணவிரு வள மையத்தில் 85 அதிகாரவாணையற்ற அதிகாரிகள் தொழின்முறை பயிற்சிகள் நிறைவு

கணனி மென்பொருள் பாடநெறி, தரைஅழகுபடுத்தல் பாடநெறி, கணினி பயன்பாட்டு உதவியாளர் பாடநெறி, அலுமினியம் பேப்ரிகேட்டிங் பாடநெறி மற்றும் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் பாழுதுபார்த்தல் பாடநெறி ஆகிய அரையாண்டு கால தொழிற்பயிற்சி நெறிகளை முடித்தவர்களுக்கான சான்றிதழ்கள் ஜூன் 28 அன்று ரணவிரு வள மையத்தில் நடைப்பெற்ற விழாவில் வழங்கப்பட்டன.

இப்பரிசளிப்பு நிகழ்வில் புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் எஸ்சி ஏக்கநாயக்க ஆர்எஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இலங்கையின் தொழிற்பயிற்சி அதிகார சபையுடன் இணைந்து 6 மாத கால கற்கைநெறிகளை பல்வேறு படையணிகளை சேர்ந்த 85 அதிகாரவாணையற்ற அதிகாரிகள் பயின்றனர். சான்றிதழ் வழங்கும் விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், பயிற்றுனர்கள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.