07th April 2023 21:34:48 Hours
ராகமவில் உள்ள ரணவிரு செவனவில் வசிக்கும் போர்வீரர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 70 பேர் கொண்ட குழுவிற்கு மார்ச் 15 மற்றும் மார்ச் 29 ஆகிய திகதிகளில் 'பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுகள்' மற்றும் மனநல குறைபாடுகள் ' ஆகிய தலைப்புகளில் இரண்டு மதிப்புமிக்க விரிவுரைகள் நடாத்தப்பட்டது.
புனர்வாழ்வு பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் ஷிரோன் ஏக்கநாயக்க மற்றும் ராகம ரணவிரு செவன தளபதி பிரிகேடியர் பாத்திய மதநாயக்க ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் லெப்டினன் எம்.எச்.எம்.சபீர் 'பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுகள்' என்ற தலைப்பில் விரிவுரையையும் கேப்டன் கே.பி.கே அந்தோனி 'மனநலம் மற்றும் மனநல குறைபாடுகள்' என்ற தலைப்பில் விரிவுரையை நிகழ்த்தினர்.