19th July 2024 18:03:37 Hours
ரணவிரு எப்பரல் அதன் வருடாந்த வலைப்பந்தாட்ட போட்டியை அலவ்வ தொழிற்சாலை மைதானத்தில் 12 ஜூலை 2024 அன்று நடாத்தியது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ரணவிரு எப்பரலின் தளபதி பிரிகேடியர் எம்ஜிஏஎன்பி மஹத்துவக்கார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் கலந்து கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் அலவ்வ தொழிற்சாலை அணியை தோற்கடித்து யக்கல தொழிற்சாலை அணி வெற்றியடைந்து சம்பியன்ஷிப் கிண்ணத்தை பெற்றுக்கொண்டது.
தளபதி, பிரதித் தளபதி, தொழிற்சாலை முகாமையாளர்கள் மற்றும் போரெவர் ஸ்கின் நேச்சுரல்ஸ் தனியார் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் செயல்பாட்டின் தலைவர் திரு. புத்திக விக்கிரமகே ஆகியோர் வெற்றியாளர்களுக்கு கிண்ணங்கள், சான்றிதழ்கள் மற்றும் பரிசு வவுச்சர்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பய்கள் கலந்து கொண்டனர்.