Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th October 2024 19:01:02 Hours

ரணகெலியவில் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு

12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீ.கே.டபிள்யூ.டபிள்யூ.எம்.ஜே.எஸ்.பி.டபிள்யூ பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் குடும்பம் ஒன்றிற்காக திஸ்ஸமஹாராம, ரணகெலியவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டை 10 ஒக்டோபர் 2024 அன்று உத்தியோகபூர்வமாக கையளித்தார். இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவு விழாவின் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

திருமதி சந்திராணி ஜயசூரிய அவர்களின் தாராளமான நிதியுதவியில் இத்திட்டம் சாத்தியமானதுடன், 12 வது கஜபா படையணி படையினர் நிர்மாணத்திற்கு தேவையான மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கியிருந்தனர். 122 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 12 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையில் படையினர் இத்திட்டத்தை மேற்கொண்டனர்.

வீடு திறப்பு விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள், சிப்பாய்கள், நன்கொடையாளர் குடும்பத்தினர், பயனாளி குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த சமூக நல திட்டத்தை வெற்றிகரமாக முடித்ததன் அடையாளமா காலாட் படைப்பிரிவு தளபதி, பயனாளி குடும்பத்தினர் மற்றும் விருந்தினர்களுடன் குழுப்படம் எடுத்துக் கொண்டதுடன் நிகழ்வு நிறைவுற்றதன.