29th June 2023 21:18:17 Hours
ரக்பி வீரர்களின் அறிவு மற்றும் தாங்கும் சக்தியை மேம்படுத்தும் நோக்கில் இராணுவ விளையாட்டு பணிப்பகத்தினரால் பல படையணிகளை சேர்ந்த 215 ரக்பி வீரர்களுக்கு பிரபலமான பயிற்சி முறையான ‘குரொஸ்பிட் முறையை ஜூன் 28 பனாகொட இராணுவ உள்ளக அரங்கில் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையின் புகழ்பெற்ற குரொஸ்பிட் பயிற்சியாளர் திரு.மோதிலால் ஜயதிலக அவர்கள் விரிவுரையை நிகழ்த்தியதுடன், விளையாட்டின் மேலும் வளர்ச்சிக்கு குரொஸ்பிட் தொடர்பான அறிவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். குரொஸ்பிட் இல் ஈடுபட்டுள்ள ரக்பி வீரர்களுக்கு அவசியமான, உயர்-தீவிரம், செயல்பாடு, வலிமை, தாங்கும் சக்தி, ஆற்றல் மற்றும் சுறுசுறுப்பு போன்ற பலன்களை வழங்க முடியும்.
ரக்பி உட்பட பல்வேறு விளையாட்டுகளில் விளையாட்டு வீரர்களுக்கு குரொஸ்பிட் ஒரு பிரபலமான பயிற்சி முறையாக காணப்படுகின்றது.
விளையாட்டுப் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஆர்எம்எம்எ பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ பயிற்சி அமர்வை நடத்துவதற்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.