16th December 2023 05:57:15 Hours
குடாநாட்டில் சேவையாற்றும் சிப்பாய்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பாவனைக்காக பலாலி டி-சந்தியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விடுமுறை விடுதியான 'பீச் எட்ஜ்' வியாழக்கிழமை (14 டிசம்பர் 2023) படையினரிடம் கையளிக்கப்பட்டது.
யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டு விடுதியை திறந்து வைத்தார்.
புதிய விடுமுறை விடுதியில் முழு வசதியுடன் கூடிய குடும்ப அறைகள், இணைக்கப்பட்ட குளியலறைகள் மற்றும் அனைத்து வசதிகளும் உள்ளன. 5 வது பொறியியல் சேவை படையணி படையினர் இத்திட்டதிற்கு தேவையான நிர்மானப்பணிகளை மேற்கொண்டனர்.
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.