26th February 2024 13:24:11 Hours
இராணுவ நியதிகள் மற்றும் இராணுவச் சட்டம் பற்றிய அறிவை மேம்படுத்தும் வகையில் 2024 பெப்ரவரி 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சட்ட உதவி பயிற்சி பட்டறை ஒன்று நடத்தப்பட்டது.
கட்டளை அமைப்புகளால் எதிர்கொள்ளும் சட்ட அம்சங்கள் தொடர்பான பிரச்சனைகளை நெறிப்படுத்த கேணல் சட்டம் கேணல் கேஏபீ குருப்பு யூஎஸ்பீ தலைமையிலான சட்ட அதிகாரிகள் குழுவினால் சரியான நேரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த செயலமர்வு நடத்தப்பட்டது. யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் செயலமர்வை ஒழுங்கமைக்க தேவையான வழிகாட்டுதலை வழங்கினார்.
பல சிரேஷ்ட அதிகாரிகள், கட்டளை படைப்பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், பிரிகேட் மற்றும் படையலகுகளின் அதிகாரிகள், இப் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டனர்.