Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th October 2024 06:40:30 Hours

யாழ்.பாதுகாப்பு படை தலைமையகத்தினால் காங்கேசன்துறை திஸ்ஸ விகாரையில் ‘கட்டின’ பூஜை நிகழ்வு

காங்கேசன்துறை வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸ ரஜ மகா விகாரையின் பாரம்பரிய 'கட்டின பூஜை' 2024 ஒக்டோபர் 18 மற்றும் 19ம் திகதிகளில் விகாரையின் பிரதமகுரு வண.ஜிந்தோட்ட நந்தராம தேரரின் தலைமையில் பல சமய அனுஷ்டானங்களுடன் பெருந்திரளான பக்தர்கள் முன்னிலையில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் ‘கடின பூஜை’ நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முதல் விழாவானது யாழ். பாதுகாப்பு படை தலைமையக படையினர் மற்றும் வழங்கல் கட்டளை படையினரினால் ஏற்பாடு செய்யப்பட்டது. இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் சமய நிகழ்வை வெற்றியடையச் செய்வதற்கு விலைமதிப்பற்ற ஆதரவை வழங்கினர்.

18 ஒக்டோபர் 2024 ஏராளமான பக்தர்களின் பங்கேற்புடன் பிரித் பாராயணம் நடத்தப்பட்டது. மறுநாள் காலை, 5 வது இலங்கை இராணுவ சேவை படையணியில் இருந்து திஸ்ஸ ராஜ மகா விகாரைக்கு கட்டின சீவராய (அங்கி) ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதி மற்றும் வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திரு.திலக் தனபால அவர்களால் மகா சங்கத்தினருக்கு வழங்கப்பட்டது.

யாழ்.பாதுகாப்பு படை தலைமையக வழங்கல் பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஜீஎல்எஸ்எம் லியனகே யூஎஸ்பீ பீஎஸ்சி மற்றும் யாழ்.பாதுகாப்பு படை தலைமையக பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதி கேணல் கே.எம்.ஏ.டபிள்யூ.கே பெரேரா ஏஏடிஓ ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இந்நிகழ்வு நடைபெற்றது. வடக்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ஏஏஏஆர் அபேசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி, யாழ்.பௌத்த சங்கத்தின் தலைவர் கலாநிதி மோர்கன், மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி சமிதா மானவடு மற்றும் முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளின் பக்தர்கள் கலந்துகொண்டனர்.