Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th March 2024 14:40:12 Hours

யாழ்.தளபதி முழங்காவில் படையலகு பயிற்சி பாடசாலைக்கு விஜயம்

யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2024 மார்ச் 04 ஆம் திகதி 10 வது (தொ) விஜயபாகு காலாட் படையணியின் படையலகு பயிற்சியின் நிறைவு விழாவுடன் இணைந்து முழங்காவில் படையலகு பயிற்சிப் பாடசாலைக்கு விஜயம் செய்தார்.

வருகை தந்த யாழ். தளபதி, 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் மற்றும் பயிற்சி பாடசாலையின் தலைமை பயிற்றுவிப்பாளர் ஆகியோரால் அன்புடன் வரவேற்கப்பட்டார். பின்னர் தலைமை பயிற்றுவிப்பாளர் பயிற்சிப் பாடசாலை பற்றிய விரிவான விளக்கத்தை வழங்கினார்.

அதனை தொடர்ந்து அவர் படையினருக்கு உரையாற்றியதுடன் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்தின் போது படையினருடன் கலந்துரையாடினார்.

52 வது காலாட் படைப்பிரிவின் பிரதி தளபதி மற்றும் பணிநிலை அதிகாரிகள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்