Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th October 2024 14:56:28 Hours

யாழ். ஸ்ரீ நாக விகாரையின் பாரம்பரிய கட்டின பூஜை

யாழ். ஸ்ரீ நாக விகாரையின் பாரம்பரிய கட்டின பூஜை 2024 ஒக்டோபர் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் சாஸ்திரபதி வண. மீகஹஜந்துரே சிறிவிமல தேரரின் வழிகாட்டலில் 51 வது காலாட் படைப்பிரிவின் ஆதரவுடன் இடம்பெற்றது.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபிஜேகே விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ ஆகியோர்களின் வழிக்காட்டலின் கீழ் இந்த வருடாந்த நிகழ்வு ஒக்டோபர் 26 அன்று, படைப்பிரிவுத் தலைமையகத்தில் நடாத்தப்பட்ட போதி பூஜை தர்ம பிரசங்கத்துடன் ஆரம்பமானது.

ஒக்டோபர் 27 அன்று, வழங்கல் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜிஎல்எஸ்டபிள்யூ லியனகே யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் தலைமையில் ஊர்வலத்துடன் யாழ். படையினர் கட்டின சீவராயத்தை ஸ்ரீ நாக விகாரைக்கு எடுத்துச் சென்றனர், அங்கு மகா சங்கத்தினருக்கு காவி உடைகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் தானம், அடபிரிகரை வழங்குதல் மற்றும் கட்டின அனிசான்ச சொற்பொழிவு ஆகியன இடம்பெற்றன.

இந்நிகழ்வில் இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ், விசேட அதிரடிப்படை, அரச அதிகாரிகள், சமயப் பிரமுகர்கள், மற்றும் பக்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.