Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th December 2024 17:20:46 Hours

யாழ். மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு சைக்கிள்கள் மற்றும் உலர் உணவுப் பொதிகள் விநியோகம்

513 வது காலாட் பிரிகேட், யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் மாணவர்களுக்கு 50 சைக்கிள்கள், வயோதிப பெண்களுக்கு 25 உலர் உணவுப் பொதிகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 25 சத்துணவு பொதிகள் வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இந்த முயற்சி 513 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் இஎம்எல்பீ ஏக்கநாயக்க யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடாத்தப்பட்டது.

24 டிசம்பர் 2024 அன்று கீரிமலை 513 வது காலாட் பிரிகேட் தலைமையகத்தில் விநியோக நிகழ்வு நடைபெற்றது. கனடாவைச் சேர்ந்த நன்கொடையாளர் திரு.ரகிகரன் சண்முகரத்தினம் அவர்கள் இத்திட்டத்திற்கு அனுசரணை வழங்கினார்.

இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் கௌரவ திரு.நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.