Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th November 2023 08:48:21 Hours

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் 'உடற்பயிற்சிக்கு அறிவியல் தழுவல்' என்ற தலைப்பில் விரிவுரை

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகம் 2023 ஆம் ஆண்டு நவம்பர் 10 - 12 ஆம் திகதிகளில் அதன் வளாகத்தில் இராணுவ உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர்களுக்கான ‘உடற்பயிற்சிக்கு உடல் அறிவியல் தழுவல்’ என்ற தலைப்பில் விரிவுரைத் தொடரின் இரண்டாம் கட்டத்தைத் நடாத்தியது.

உடல் பயிற்சிகள் தொடர்பான விஞ்ஞான பொறிமுறையின் பயிற்றுவிப்பாளர்களுக்கு அறிவினை வழங்கும் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே நவரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் மேற்பார்வையில் இத்திட்டம் இரண்டாவது முறையாக முன்னெடுக்கப்பட்டது.

உடல் தகுதி, விளையாட்டு, உடற்பயிற்சி தொடர்பான காயங்களுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பு தொடர்பான அவர்களின் அறிவை விரிவுபடுத்தும் நோக்கத்துடன், பொருத்தமான விரிவுரைகள் வழங்கப்பட்டன. தகுந்த நேரத்தில் தகுதி வாய்ந்த விரிவுரையாளர் குழுவினருடன், பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே நவரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, 9 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஐ.எம்.ஜி.என் ஜயதிலக்க, இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கெப்டன் ஆர்.ஈ.டபிள்யூ.எல் தயாரத்ன, தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு பயிற்றுவிப்பாளர் கோப்ரல் ஐ.யு.டபிள்யூ திசாநாயக்க மற்றும் கோப்ரல் ஈ.ஜி.எஸ் ரணசிங்க ஆகியோரும் இணைந்து கொண்டனர்.

ஆரம்ப உரை பொதுப் பணிநிலை அதிகாரி 1 (செயல்பாடுகள் மற்றும் பயிற்சி) லெப்டினன் கேணல் கே.ஏ.ஏ.கே கருணாரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களினால் நடாத்தப்பட்டது.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சேவையாற்றும் 84 படையினர் இச்செயலமர்வில் கலந்து கொண்டனர்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் உடற்கல்வி பயிற்றுவிப்பாளர்களும் இவ்விரிவுரையில் கலந்துகொண்டதுடன், பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே நவரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களினால் ஆற்றிய நிறைவுரையுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.