Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th October 2024 21:12:45 Hours

யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியினால் யாழ் பகுதியில் வசதியற்ற குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கையளிப்பு

யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக படையினரின் தற்போதைய வீடமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பரந்தன் மற்றும் கிளிநொச்சியில் வசிக்கும் தேவையுடைய குடும்பத்திற்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று வீடுகளின் சாவியை யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் 2024 ஒக்டோபர் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் கையளித்தார்.

மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் முதலாவது வீடு பரந்தன் சிவபுரத்தைச் சேர்ந்த திரு.துரைசாமி சந்திரதேவனிடம் கையளிக்கப்பட்டது. பேராசிரியர் பண்டார அத்தாவுட, திரு. ஆரியரத்ன விஜேசிறி (உதவி கல்விப் பணிப்பாளர்), திரு. ருவான் தேசப்பிரிய ஜயரத்ன, திரு. ஜீவநாதன் கந்தையா ஆகியோரின் அனுசரனையில் இவ் வீடு 6 வது இலங்கை சிங்க படையணி படையினரால் நிர்மாணிக்கப்பட்டது.

அதனையடுத்து, கிளிநொச்சி பன்னங்கண்டியில் சார்ஜன் சஞ்சய ஜீஎம்ஜீ அவர்களின் மனைவி லான்ஸ் கோப்ரல் எம்.யோகவதனாவுக்கு இரண்டாவது வீட்டை யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி வழங்கினார். 14வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் நிர்மாணிக்கப்பட்ட இவ் வீட்டுக்கு 14வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் மற்றும் குடும்பத்தினர் கட்டுமான உதவி பொருட்களை வழங்கினர்.

இவ்விரண்டு வீடுகளும் 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்கேஎன்சீ ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிக்காட்டலுக்கமைய 553 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் டபிள்யூஎஐஎஸ் மென்டிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் கட்டப்பட்டது.

அதேபோல், இயக்கச்சியில் திருமதி ராஜ்குமார் ரஞ்சிதா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் மற்றொரு வீட்டை யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி கையளித்தார். லெப்டினன் கேணல் ரோஹன திலகரத்ன (ஓய்வு), மேஜர் ருவான் சிவநெத்தி (ஓய்வு), மேஜர் சேனாதீர (ஓய்வு), திரு. பிரமுக் பெர்னான்டோ, திரு. நளிந்த தியாகமகே, திரு. பிரவீன் கிரிவத்துடுவ, திரு. இஜாஸ் அஹமட், மற்றும் பாஸ்கரன் கந்தையா ஆகியோர் இத் திட்டத்திற்கு அனுசரனை வழங்கினர்.

இந்த வீடு 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசூ யுஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 53 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் எஸ்எம்சீஏஎஸ் சமரதுங்க மற்றும் 522 வது பதில் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டது.

நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், படையினர், குடும்பத்தினர், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.