Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd March 2023 09:04:20 Hours

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக கரப்பந்து போட்டியில் 21 அணிகள் பங்குபற்றல்

குழுப்பணி உணர்வுகள், தனிப்பட்ட தொடர்பை மேம்படுத்துதல் மற்றும் படையினர்களிடையே ஒட்டுமொத்த செயல்திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கட்டளையின் கீழுள்ள பிரிகேட்கள் மற்றும் படையலகுகளில் உள்ள அனைத்து வீரர்களுக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்ட கரப்பந்து போட்டி யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் உடற்பயிற்சி கூடத்தில் திங்கட்கிழமை (20) நடைபெற்றது.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட அவர்களின் கருத்தியல் வழிகாட்டலின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. மொத்தம் 21 கரப்பந்து அணிகள் பங்குபற்றயதுடன் 4 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி மற்றும் 10 வது பொறியியல் படையணி இறுதிச் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.

4 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் கரப்பந்து வீரர்கள் ஆண்கள் பிரிவில் சம்பியன்ஷிப்பை வென்றதுடன், 7 வது இலங்கை இராணுவ மகளிர் படையணி பெண்கள் பிரிவில் சம்பியன்ஷிப்பை வென்றனர். 6 வது இலங்கை இராணுவ சமிக்ஞைப் படையணியினர் இரண்டாம் இடத்தைப் பெற்றனர்.

மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் இணைந்து சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பங்குபற்றினர்.