Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th April 2023 21:47:27 Hours

யாழ். பாதுகாப்பு படையினரி்ன் புத்தாண்டு விழா

பல கலாசார, மத மற்றும் பல்லின சமூகத்தில் பரஸ்பர புரிதல், மதிப்புகள், அணுகுமுறைகள் மற்றும் உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்துடன், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகம் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டில் தனது பங்கைச் சேர்க்கும் வகையில். வடக்கு முன்னரங்கு பராமரிப்புப் பிரதேசத்தில் சிங்கள தமிழ் புத்தாண்டு விழாவை யாழ்ப்பாணம் பலாலி விளையாட்டு மைதானத்தில் திங்கட்கிழமை (10) நடாத்தியது.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிபிஎஸ்என் போதொட்ட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி, சில சிரேஷ்ட அதிகாரிகள் மங்கள விளக்கேற்றிய பின்னர் அன்றைய நிகழ்வுகள் ஆரம்பமானது.

கயிறு இழுத்தல், தலையணை சண்டை, வழுக்கு மரம் ஏறுதல், பனிஸ் சாப்பிடுதல், பப்பாளி விதைகள் எண்ணுதல், யானைக்கு கண் வைத்தல், பானை உடைத்தல், புத்தாண்டு இளவரசன் மற்றும் இளவரசி தேர்வு, போன்ற பாரம்பரிய மற்றும் வேடிக்கையான அம்சங்களால் இந்நிகழ்வு நிறைந்திருந்தது. நெசவு, மரதன் ஓட்டம், வினோத உடை போட்டி, மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், ரபான் இசைத்தல் போன்றவை இடம் பெற்றிருந்தன.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிபிஎஸ்என் போதொட்ட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, அந்த விளையாட்டு மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களை வழங்கினார்.

படையலகுகளை பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பெரும் கூட்டத்தினர் இந்த நிகழ்வுகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டன