Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th June 2023 21:47:38 Hours

யாழ். படையினருக்கு போதைப்பொருள் தடுப்பு குறித்து அறிவூட்டல்

யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தின் 553 வது பிரிகேடினால் அமைப்பினுள் போதைப்பொருள் ஊடுருவலைச் சமாளிப்பதற்கான தீவிர முயற்சியில் படையினரின் நல்வாழ்வைப் பாதுகாக்கும் நோக்கில் யாழ்ப்பாணப் படையினருக்கான விரிவான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை புதன்கிழமை (ஜூன் 28) 55 வது காலாட் படைப்பிரிவு உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பாடு நடாத்தப்பட்டது.

மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையத்தில் சேவையாற்றும் புகழ்பெற்ற ஆலோசகர்களான திரு.அமரநாத் தென்ன மற்றும் திரு.சம்பத் டி சேரம் ஆகியோரால் நிகழ்ச்சி நடத்தப்பட்டதுடன் இந் நிகழ்வு 55 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயூபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் 553 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜீஎஸ்கே பெரேரா அவர்களின் கண்காணிப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

55 வது காலாட் படைப்பிரிவில் இருந்து 420 படையினர் நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன் மேலும் இது சமீபத்திய ஆராய்ச்சி மற்றும் சான்றுகள் அடிப்படையிலான உத்திகளை வரைந்து, போதைப்பொருள் துஷ்பிரயோகம் தொடர்பான சிக்கல்களின் சிக்கலான தன்மையை நிவர்த்தி செய்வதற்கான ஒரு விரிவான அணுகுமுறை நிகழ்வாக அமைந்திருந்தது. மேலும் இந் நிகழ்வில் கல்வி, தடுப்பு, ஆதரவு சேவைகள் மற்றும் சட்ட அமுலாக்க நடவடிக்கைகளை உள்ளடக்கி இருந்தது.

மேலும், படையினர் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் ஆபத்துகள், உடல் மற்றும் மனநல அபாயங்கள், சட்டரீதியான மாற்றங்கள் மற்றும் இராணுவத் தயார்நிலையில் ஏற்படக்கூடிய தாக்கம் உள்ளிட்டவை பற்றிய விரிவான அறிவையும் இலக்கு பயிற்சியையும் பெற்றனர்.