27th June 2024 00:25:49 Hours
52 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வைஎபிஎம் யாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 52 வது காலாட் படைபிரிவின் படையினரால் 21 ஜூன் 2024 அன்று படைப்பிரிவு தலைமையக வளாகத்தில் பொசன் பண்டிகையை முன்னிட்டு ரொட்டி தானம் வழங்கப்பட்டது.
இதேவேளை, அதே நாளில் பொசன் தினத்தை முன்னிட்டு 4வது இலங்கை சிங்கப் படையணியினரின் ஏற்பாட்டில் யா/358 இமையனன் பகுதியில் பலாக்காய் அவியல் தானம் வழங்கப்பட்டது.
அத்துடன் 11 வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ், சீனி சம்பல் ரொட்டி மற்றும் தேநீர் தானம் படையலகு வளாகத்திற்கு அருகில் வழங்கப்பட்டது.
மேலும், 10 (தொ) விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரியின் வழிகாட்டலின் கீழ், 10 (தொ) விஜயபாகு காலாட் படையணியின் ஏற்பாட்டில் மருதங்கேணியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் பெரும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.