19th May 2023 19:37:12 Hours
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினர், கடந்த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து யாழ். பல்கலைக்கழக மருத்துவப் பீடத்திற்கும், பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்திற்கும் தகுதி பெற்ற யாழ். மாணவர்களின் சாதனைகளைப் பாராட்டி மடிக்கணினிகளை வழங்கினர்.
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் திருமதி ஜூலி கேப்பர் அவர்களினால் 386,000.00 ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும் சிவில் விவகார தலைமை ஒருங்கிணைப்பாளர், மற்றும் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினரின் ஒருங்கிணைப்பு மூலம் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த மடிக்கணினிகள் ஞாயிற்றுக்கிழமை (14) காங்கேசன்துறை தல்செவன இராணுவ விடுதிக்கு பயனாளிகளை அவர்களது பெற்றோருடன் வரவழைத்து வழங்கி வைக்கப்பட்டன.
திருமதி ஜூலி கேப்பர் மற்றும் அவரது கணவர், திரு பெர்சி தல்கஹாகொட, யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் சிவில் விவகார அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.