18th April 2023 21:58:22 Hours
யாழ். துரையப்பா விளையாட்டரங்கத்தில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சனிக்கிழமை (15) யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 51 வது காலாட் படைபிரிவின் படையினர் வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிபிஎஸ்என் போதொட்ட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி மற்றும் 51 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூபி வெலகெதர ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி ஆகியோர் சம்பிரதாய நிகழ்வுக்கு அமைய புத்தாண்டு நிகழ்வை கொண்டாடும் வகையில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நிகழ்வில் இணைந்தனர்.
நல்லிணக்கம், அணுகுமுறைகள், சிவில்-இராணுவ ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உறவுகளை பல் மத இன கலாசார மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டும் புத்தாண்டு நிகழ்வில் அன்றைய யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் அழைப்பின் பேரில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அவர்கள் கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் மங்கள விளக்கேற்றலின் பின்னர், பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் போட்டிகள் தொடர்ந்தன. சைக்கிள் பந்தயம், வழுக்கு மரம் ஏறுதல், தலையணை சண்டை, பானை உடைத்தல், கயிறு இழுத்தல், யானைக்கு கண் வைத்தல், இசை நாற்காலி பலூன் உடைத்தல், பனிஸ் சாப்பிடுதல், தடை தாண்டல் ஓட்டம், தேசிக்காய் சமனிலை ஓட்டம் போன்ற சில சுவாரஸ்யமான விளையாட்டுகள் இடம் பெற்றன. கோலம் போடுதல், வினோத உடை போட்டி, தாச்சி குறி, போன்றவையும் இடம் பெற்றன.
இவ்விழாவில் சிங்களம் மற்றும் தமிழ் பாரம்பரிய நடன அம்சங்களால் வர்ணமயமாக்கப்பட்டதுடன் நிகழ்வின் போது இராணுவ இசைக்குழுவினர் தமிழ் மற்றும் சிங்கள பாடல்களை இசைத்து பார்வையாளர்களை கவர்ந்தனர். இந்நிகழ்வில் பெருமளவிலான தமிழ் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
பிரிகேட் தளபதிகள், 51 வது காலாட் படைபிரிவின் பதவிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், பிரிகேட் மற்றும் படையலகுகளின் அதிகாரிகள் மற்றும் 51 வது காலாட் படைபிரிவின் கீழ் உள்ள படையினர் யாழ்.மாவட்ட செயலாளர் மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் ஒருங்கிணைப்புடன் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு பெற்றமை குறிப்பிடதக்கதாகும்.