Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st May 2023 20:08:51 Hours

யாழ் தளபதியின் மரியாதை விஜயம்

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிபிஎஸ்என் போத்தொட்ட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் மாவட்டச் செயலாளர் திரு.சிவபாலசுந்தரன், யாழ். பிரதம செயலாளர் திரு. எஸ்எம் சமன்பந்துலசேன, ஸ்ரீ நாகவிகாரை மற்றும் நாவட்குழி விகாரையின் பீடாதிபதி வண.மீகஹஜந்துரே சிறி விமல தேரர் ஆகியோருக்கு இராணுவ அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக 2023 மே 29 விளக்கினார்.

அதே நாளில், மேஜர் ஜெனரல் போத்தொட்ட அவர்கள் புனித ஜோன் பொஸ்கோ பாடசாலைக்கு விஜயம் செய்து, யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்தார்.

தனது விஜயத்தின் போது, இராணுவத்தினருக்கும் சிவில் சமூகத்தினருக்கும் இடையிலான நல்லிணக்கத்தை மேலும் ஊக்குவித்தல் தொடர்பில் யாழ் தளபதி கருத்துக்களை பரிமாறிக் கொண்டார். மரியாதை நிமித்தமான விஜயத்தில் யாழ். தளபதியாக இருந்த அவர் தனது திட்டமிடப்பட்ட கடமைகளைத் தவராமல் செய்தார் என்பது குறிப்பிடதக்கதாகும்.