Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th June 2024 08:07:35 Hours

யாழில் மத நல்லிணக்கத்தை மேம்படுத்த பொசன் தின தர்ம சொற்பொழிவு

51 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.ஜே.கே விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், படைப்பிரிவு படையினர் 2024 ஜூன் 21 அன்று பொசன் போயா தினத்தை முன்னிட்டு ‘தம்ம சொற்பொழிவை’ ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் கலந்து கொண்டார். யாழ். ஸ்ரீ நாகவிஹார பிரதம தேரர் வண.மீகஹஜதுரே சிறிவிமல தேரர், கோண்டாவில் பழனியாண்டி இந்துக் கோவில் குருக்கள் ரவி, யாழ்.பல்கலைக்கழக ஆன்மிக நிலையத்தின் பணிப்பாளர் அருட்தந்தை மக்டொனால்ட் ஆகியோர் சமய நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை சொற்பொழிவின் போது பங்கேற்பாளர்களுக்கு வலியுறுத்தினர்.

சிமிக் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்வு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த திட்டத்தில் அப்பகுதியிலுள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதேசவாசிகள் பயனடைந்தனர்.