27th June 2024 00:10:08 Hours
உலக பௌத்த சங்க இளைஞர்களின் 20 வது பொது மாநாடு 22 ஜூன் 2024 அன்று நனையினாதீவு ரஜமஹா விகாரையில் நடைபெற்றது, அதைத் தொடர்ந்து 23 ஜூன் 2024 அன்று யாழ் வலம்புரி ஹோட்டலில் உலக பௌத்தர்களின் 5 வது பொது மாநாடு நடைபெற்றது.
யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இவ்விரு நிகழ்வுகளிலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். யாழிற்கு வருகை தந்த குழுவினரை ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி மற்றும் யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி ஆகியோர் அன்புடன் வரவேற்றனர். யாழ் தளபதி தனது உரையின் போது, இராணுவத் தளபதி, ஜனாதிபதி செயலக அதிகாரிகள், யாழ் மாவட்ட பதில் மாவட்ட செயலாளர் மற்றும் உலக பௌத்த சங்க இளைஞர் யுவதிகளின் விலைமதிப்பற்ற வழிகாட்டல், மற்றும் அறிவுறுத்தல்களுக்காக யாழ் தளபதி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். இந்த நிகழ்வை நடத்துவதில் யாழ் தலைமையகம் வெற்றிகரமான உதவியை வழங்கியது.
கம்போடியா, சீனா, இந்தியா, ஜப்பான், லாவோஸ், மலேசியா, மியான்மர், நேபாளம், சிங்கப்பூர், இலங்கை, தாய்வான், தாய்லாந்து, ஐக்கிய இராச்சியம் மற்றும் வியட்நாம் உட்பட 24 நாடுகளைச் சேர்ந்த 37 பௌத்த தேரர்கள் மற்றும் 201 பக்தர்களும் இந்தக் குழுவில் கலந்துகொண்டனர். இலங்கையின் சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் இந்த நிகழ்வு உலகுக்கு எடுத்துக்காட்டுகிறது என்பது குறிப்பிடதக்கதாகும்.