Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th April 2025 10:20:06 Hours

யாழில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகம், யாழ்ப்பாண பொதுமக்களுக்காக 2025 ஏப்ரல் 06, அன்று துரையப்பா மைதானத்தில் புத்தாண்டு நிகழ்வுவை ஏற்பாடு செய்திருந்தது.

பல்வேறு சமூகங்களிடையே சமூக உணர்வு, நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர மரியாதை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட "தூய இலங்கை" திட்டத்தின் கீழ் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. நீடித்த அமைதியைக் கட்டியெழுப்புவதிலும் அனைத்து மக்களின் சமூக நல்வாழ்வை உறுதி செய்வதிலும் அரசாங்கம், இராணுவம் மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இந்த விழா எடுத்துக்காட்டுகிறது. அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்கிய சமூகங்களிடையே பிணைப்புகளை வலுப்படுத்திய தொடர்ச்சியான பாரம்பரிய புத்தாண்டு விளையாட்டுகள் மற்றும் கலாசார நிகழ்வுகள் இதில் இடம்பெற்றன.

கலாசார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் பன்முகத்தன்மை கொண்ட யாழ் குடாவில் நிகழ்வை நடத்துவதன் மூலம், இலங்கை இராணுவம் தேசிய ஒற்றுமை மற்றும் அமைதியான வாழ்வுக்கான அர்ப்பணிப்பை நிருபித்ததுள்ளது. இந்த விழா இன நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கும், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் கொண்டாட்டத்தில் ஒன்றிணைவதற்கும், தடைகளை உடைப்பதற்கும், பகிரப்பட்ட கலாசார அனுபவங்கள் மூலம் நட்பை வளர்ப்பதற்கும் ஒரு உற்சாகமான தளமாக காணப்பட்டது.

இந் நிகழ்வில் யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். யாழ் மாவட்டச் செயலாளர் திரு. எம். பிரதீபன் அவர்கள் கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும், பல சிறப்புமிக்க சிவில் மற்றும் இராணுவ பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிஜிஎஸ் பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 55 வது காலாட் படைப்பிரிவின் படையினர் 2025 ஏப்ரல் 19 ஆம் திகதி கிளிநொச்சி மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

55 வது காலாட் படைப்பிரிவின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்.

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் 2025 ஏப்ரல் 06 அன்று யாழ் துரையப்பா மைதானத்தில் பொதுமக்களுக்காக புத்தாண்டு நிகழ்வு ஏற்பாடு