12th November 2024 17:37:32 Hours
வழங்கல் பணிநிலை பாடநெறி எண். 10 இன் இருபத்தைந்து மாணவர் அதிகாரிகள், 30 ஒக்டோபர் 2024 அன்று, வழங்கல் செயல்பாடுகள் தொடர்பான நடைமுறை புரிதலை மேம்படுத்துவதற்காக, யக்கல ரணவிரு எப்பரல் ஆடைத் தொழிற்சாலைக்கு தங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக விஜயம் மேற்கொண்டனர்.
ரணவிரு ஆடை கட்டமைப்பு, வரலாறு மற்றும் வளர்ச்சியை விவரிக்கும் விளக்கக்காட்சியுடன் இந்த விஜயத்தின் போது விவரிக்கப்பட்டது. இராணுவத்தின் வழங்கல் கட்டமைப்பிற்குள் அதன் பங்கு தொடர்பான மதிப்புமிக்க அறிவுகள் வழங்கப்பட்டன. மாணவ அதிகாரிகள், தளபதி மற்றும் அவரது குழுவினருடன் இணைந்து உற்பத்தி செயல்முறை மற்றும் சம்பந்தப்பட்ட வழங்கல் தொடர்பான கருத்துக்களை கலந்துரையாடினர்.
இவ் விஜயத்தில், வடிவமைப்பு, துணிகளை கையாளுதல், வெட்டுதல் மற்றும் பொதி செய்தல் போன்ற முக்கிய துறைகளை அவதானிக்க வாய்ப்பளிக்கப்பட்டது. உற்பத்தி சுழற்சியின் விரிவான விளக்கத்தையும் பெற்றுகொண்ட அவர்கள், தொழிற்சாலை தளபதிக்கு மாணவர் அதிகாரிகளால் நினைவுச் சின்னம் வழங்கலுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.