22nd March 2023 21:37:34 Hours
2023 மார்ச் 16-17 ஆம் திகதிகளில் வெலிசர கொழும்பு சுப்பர் கிராஸ் பந்தயப் பாதையில் இலங்கை கடற்படையினால் நடத்தப்பட்ட பாதுகாப்பு சேவைகளின் மோட்டார் பந்தய சாம்பியன்ஷிப் – 2023 யை இலங்கை இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் பந்தய வீரர்கள் வென்றனர்.
184 புள்ளிகளைப் பெற்ற இராணுவ வீரர்கள் ஒட்டு மொத்த வெற்றியாளர்களாகவும், 126 புள்ளிகளைப் பெற்ற இலங்கை விமானப்படையினர் இரண்டாம் இடத்தையும் சுவீகரித்துக்கொண்டனர். இதன்படி, இலங்கை இராணுவ வீரர்கள் 5 தங்கப் பதக்கங்கள், 9 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 1 வெண்கலப் பதக்கத்தை வென்றனர். சம்பியன்ஷிப் போட்டியின் 5 போட்டிகளிலும் இலங்கை இராணுவத்தின் 7 வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
சிறந்த வீரருக்கான வெற்றிக்கிண்ணம் இலங்கை இராணுவத்தின் கோப்ரல் எச்.எம்.ஜே.எஸ் பிரேமரத்னவுக்கு வழங்கப்பட்டது.
இலங்கை இராணுவ மோட்டார் விளையாட்டுக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் இந்துசமரகோன் போட்டியாளர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்கினார்.