Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th November 2020 11:58:02 Hours

மேலும் வெளிநாட்டிலுள்ளவர்கள் இலங்கை வருகை-நொப்கோ தெரிவிப்பு

இன்று (27) காலை வரை, கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 559 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 05 பேர் வெளி நாட்டிலிருந்து வந்தவர்கள் மற்றும் ஒருவர் கிரிஸ் நாட்டிலிருந்து வந்த கடல் பாதுகாவலர் ஏனைய 553 பேரும் உள்நாட்டவர்கள். குறித்த தொற்றாளர்களில் 253 பேர் கொழும்பு மாவட்டம், 65 பேர் கம்பஹா மற்றும் 35 பேர் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இன்று (27) காலை வரை 6.00 மணியளவில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் மினுவாங்கொடை மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,487 பேர் ஆகும். அவர்களில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் 3,059 பேரும் பேலியகொடை சந்தை கொத்தணியில் தொற்றாளர்களில் மொத்தம் 15,428 பேரும் உள்ளடங்குவர்.மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணி தொற்றாளர்களில் மொத்தம் 12,437 பேர் சுகமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

அதன் பிரகாரம் 26 ஆம் திகதி வரையான மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 22,027 ஆகும். அவர்களில் 15,815 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். நேற்று காலை வரை 6,113 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை (27) 0600 மணியளவில் (கடந்த 24 மணி நேரத்திற்குள்) முழுமையாக சுகமடைந்த 369 பேர் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அதனடிப்படையில் 27 ஆம் திகதி காலை வரை கொவிட்-19 தொற்று நோய் காரணமாக மரணமடைந்த மொத்த நபர்களின் எண்ணிக்கை 99 ஆகும். நேற்றுவரை இலங்கையில் கொவிட்-19 தொற்று காரணமாக 03 மரணங்கள் பதிவாகியுள்ளது. அவர்கள் கொழும்பு 08, பேலியகொடை மற்றும் பம்பலப்பிட்டிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

இன்று (26) காலை தோஹா கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 50 பயணிகளும், துபாயிலிருந்து UL 226 விமானம் ஊடாக 52 பயணிகளும் , அவுஸ்திரேலியாவிலிருந்து UL 607 விமானம் ஊடாக 191 பயணிகளும் , ஜபானிலிருந்து UL 455 விமானம் ஊடாக 12 பயணிகளும் இலங்கை வருகை தந்துள்ளனர். மற்றும் இதாலியிலிருந்து UL 1208 விமானம் ஊடாக 75 பயணிகள் வரவுள்ளனர் அவர்கள் அனைவரையும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று காலை (27) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 47 தனிமைப்படுத்தல் மையங்களில் 5,114 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நவம்பர் 26 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 12,105 ஆகும். short url link | adidas Yeezy Boost 350