Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th February 2024 19:15:46 Hours

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் புதன்கிழமை பயிற்சி நாளை முன்னிட்டு விரிவுரை

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினருக்கு இராணுவ பொறியியல் சேவைகள் படையணி கேட்போர் கூடத்தில் 14 பெப்ரவரி 2024 அன்று புதன்கிழமை பயிற்சி திட்டத்தின் கீழ் இரண்டு பெறுமதிமிக்க விரிவுரைகளை நடாத்தப்பட்டன.

லெப்டினன் கேணல் ஏ.எம்.டி.ஏ.பி. ஹரம்பத் அவர்களினால் 'உள்ளக பாதுகாப்புக் காலத்தில் இலங்கை இராணுவத்தின் பொறுப்புகள்' தொடர்பான விரிவுரையையும் மேஜர் ஜே.கே.ஜே.கே சிறிசாந்த அவர்களினால் 'சமூக ஊடகங்களின் பயன்பாடும் இலங்கை இராணுவத்தில் அதன் தாக்கமும்' என்ற தலைப்பில் இரண்டாவது விரிவுரையும் நடாத்தப்பட்டது.

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் பணியாற்றும் 10 அதிகாரிகள் மற்றும் 183 சிப்பாய்கள் இந்த விரிவுரையில் கலந்து கொண்டனர்.