18th October 2024 18:37:35 Hours
பயிற்சி நாள் தொடர்பாக இராணுவ ஒழுக்கத்தை பேணுதல் தொடர்பான விரிவுரை ஒன்று 2024 ஒக்டோபர் 16 அன்று 1 வது இலங்கை இராணுவ போர் கருவி படையணி விரிவுரை மண்டபத்தில் நடத்தப்பட்டது.
பனாகொட ஒழுக்க கம்பனியின் அதிகாரியான இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் மேஜர் பீடிஜீஜேஐஎஎன் முனசிங்க எல்எஸ்சீ அவர்கள் வருகையின்மை,, சட்டவிரோத போதைப்பொருள், சிறுவர் துஷ்பிரயோகம், ஒன்லைன் சூதாட்டம், தனிப்பட்ட ஒழுக்கம் மற்றும் இராணுவ ஒழுக்கத்தின் ஒட்டுமொத்த முக்கியத்துவம் போன்ற முக்கிய பிரச்சினைகளை எடுத்துரைக்கும் விரிவுரையை வழங்கினார்.
விரிவுரையில் 07 அதிகாரிகள் மற்றும் 127 சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.
படையினரின் ஒழுக்கம் மற்றும் தொழில்முறைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை இவ் விரிவுரை எடுத்துக்காட்டாக அமையப்பட்டது.