27th October 2024 13:56:50 Hours
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 23 ஒக்டோபர் 2024 அன்று மாத்தறை, துடாவவில் ஒரு குடும்பத்திற்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டைக் கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இராணுவத் தளபதியின் மூலோபாய வழிகாட்டுதலின் கீழ் இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் தலைமையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 613 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோரின் கண்காணிப்பில் 3 வது (தொ) கெமுனு ஹேவா படையணி படையினரின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டது. படையினர் தங்களின் தொழில்நுட்ப திறன்களைப் பயன்படுத்தி, உயர்தர கட்டுமானத்தையும் சரியான நேரத்தில் வீட்டை கட்டி முடிக்கவும் பங்களித்தனர்.
புதிய வீடு, திரு. சி.ஜி. எதிரிவீர மற்றும் அவரது குடும்பத்தினருக்காக கட்டப்பட்டது. உள்ளூர் நன்கொடையாளர்களின் தாராள மனப்பான்மையால் நிதி உதவி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். இல்லத் திறப்பு விழாவின் போது, பிரதம அதிதி பல முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பயனாளிக்கு சம்பிரதாயபூர்வமாக வீட்டை கையளித்தார். இந்நிகழ்வின் போது குடும்பத்தாருக்கு ஆசி வழங்கி அவர்களின் எதிர்கால முயற்சிகள் வெற்றியடைய பாரம்பரிய சமய வழிபாடுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் 61 வது காலாட் படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் கே.டி.பீ. டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, 613 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எஸ்.என்.எம்.ஏ.பி அரம்பேபொல ஆர்டபிள்யூபீ மற்றும் 3 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் டபிள்யூ.டி.எஸ் நந்தசிறி, சிரேஷ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள், நன்கொடையாளர்கள் மற்றும் பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இத் திட்டம் சமூக ஆதரவு மற்றும் ஒத்துழைப்பின் உணர்வைப் பிரதிபலிக்கிறது.